தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள கொரானா பெருந்தொற்றுச் சவாலில் இருந்து
இலங்கை மக்களை பாதுகாக்கும் உன்னதமான பணியில் அரச மற்றும் தனியார்
சுகாதாரத்துறையினர் தொண்டு நிறுவனங்கள் சர்வதேச நாடுகள் மற்றும்
அமைப்புகள் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தவகையில் நீண்டகாலமாக இலங்கை மக்களது சுகாதார ஆரோக்கிய
மேம்பாட்டிற்காக பல்வேறு உதவித் திட்டங்களை செயற்படுத்திவரும்
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மருத்துவ சுகாதார கழகத்தினர்
(International Medical Health Organization) 3.1 மில்லியன் அமெரிக்க
டொலர்கள் (620 மில்லியன் இலங்கை ரூபா) பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்
மற்றும் மருத்துவப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
பன்னிரண்டு பாரிய கொள்கலன்களில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த
மருத்துவ உதவிப் பொருட்களை சுகாதார அமைச்சிற்கு உத்தியோகபூர்வமாக
கையளிக்கும் நிகழ்வு இன்று காலை (01.09.2021) சுகாதார அமைச்சின் மருத்துவ
வழங்கல் பிரிவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின்
செயலாளர் வைத்தியர் முனசிங்கஇ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
வைத்தியர் அசேல குணவர்த்தனஇ பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
(திட்டமிடல்) வைத்தியர் சதாசிவம் சிறீதரன்இ பிரதி சுகாதர சேவைகள்
பணிப்பாளர் நாயகம் (ஆய்வுகூட சேவைகள்) வைத்தியர் சுதத் தர்மரத்னஇ பிரதி
சுகாதார சேவைகள் பணிப்பாளர் (மருந்துவ வழங்கல்கள்) வைத்தியர் டீ.ஆர்.கே
ஹேரத்)இ மற்றும் மருந்து வழங்கல் பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமசிங்க
ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் மலையகம்இ கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள
வைத்தியசாலைகள் உட்பட நாட்டில் சகல பாகங்களிலும் உள்ள தெரிவுசெய்யப்படட
வைத்தியசாலைகளுக்கு இந்த உதவிப் பொருட்கள் சுகாதார அமைச்சினால்
உடனடியாகவே பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
Discussion about this post