சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் உடன்பாட்டை எட்டும் நோக்குடன் இலங்கை அதிகாரிகள் கடன் மறுசீரமைப்பு ஆலோசகர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தை உள்ளடக்கி நிதி அமைச்சு இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளது.
இலங்கையில் கடன் வழங்குநர்களுடன் முறையாகப் பணியை ஆரம்பிக்கும் முன்னர் கடன் நடவடிக்கைக்கான பகுப்பாய்வு கட்டமைப்பில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post