இலங்கைக்கு வருபவர்கள் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார
நெருக்கடியால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து எச்சரிக்கையுடன்
இருக்கவேண்டும் என கனடா அறிவுரை வழங்கியுள்ளமை தொடர்பாகஇலங்கை அரசாங்கம்
அதிருப்தியை வெளியிடவுள்ளது.
இராஜதந்திரவட்டாரங்கள் மூலமாக இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிடவுள்ளது.
கனடா இதுபோன்ற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை நியாயமற்ற விடயம் என
கூறியுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே இவ்
விவகாரம் தொடர்பாக கனடா தூதுவருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை
நடத்தும் என தெரிவித்துள்ளார்.
Discussion about this post