இலங்கை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல பாரிய சவால்களை எதிர்நோக்கும்
நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
உணவு பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக்
கடன்களை மீளச் செலுத்துதல் போன்ற பாரிய பிரச்சினைகளை
இலங்கை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையினால் விடுக்கப்பட்ட
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூடி வரும் பணவீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை பெரிய
அளவில் உள்ள போதும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் மத்திய வங்கிகள் சென்ற
ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பகுதியில் வட்டி விகிதத்தை கூட்டியுள்ளன என
இவ் அறிக்யைில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post