இறுதிகட்ட போரின்போது இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும்
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கட்டளை வழங்கும்
அதிகாரத்திலிருந்த இராணுவ ஜெனரல்களுக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம்
சர்வதேச மெக்னிற்ஸ்கி சட்டத்தின் கீழ் தடை விதிக்க வேண்டும் என 7
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக கூறியுள்ளன.
இதுமட்டுமன்றி இவ்வருடம் பிரித்தானியாவின் பேர்மிங்கில் இடம்பெறாவுள்ள
பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியில் பங்கேற்பதற்கு முன்னாள்
இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய தனது அணியுடன் பிரித்தானியாவிற்கு வருகை
தரும்பட்சத்தில், சர்வதேச சட்டவரம்பின் கீழ் அவரைக் கைதுசெய்து விசாரணையை
ஆரம்பிப்பதொன்றே தற்போது பிரித்தானியா செய்யக்கூடிய
நடவடிக்கையாகும் என்றும் அவ்வமைப்புக்கள் கூறியுள்ளன .
Discussion about this post