உடனடியாக இலங்கைக்கு ஆட்சி மாற்றம் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச கூறியுள்ளார்.
தனது 55ஆவது பிறந்தநாளை புதன்கிழமை வடக்கில் கொண்டாடும் சஜித் பிரேமதாச,
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் புதிய
ஆட்சியாளர்கள் இலங்கைக்கு தேவை என கூறியுள்ளார்.
இப்போதைய தேசிய அவலத்திலிருந்துவெளியேறுவதற்கு பல விடயங்களைச் செய்ய
வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும் , தேசத்தை ஒரு நல்ல தலைவரிடம் வழங்குவதே மிக
முக்கியமானது எனவும் இப்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும்
என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Discussion about this post