7 தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்திய பிரதமருக்கான கடிதத்தில்
கையெழுத்திட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம்
அடைக்கலநாதன் கூறியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இந்திய பிரதமருக்கான கடிதத்தில் இன்று காலை கைச்சாத்திட்டதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தல்
உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தி எழுதியுள்ள கடிதத்தில் கையொப்பமிடும்
நடவடிக்கை தற்போது முடிவடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடிதம் இன்று இந்திய பிரதமருக்கு அனுப்பப்படவிருந்த நிலையில், இந்திய
தூதுவர் புது டெல்லி சென்றுள்ளதால், அவர் நாடு திரும்பியவுடன் ஆவணத்தை
அனுப்பவுள்ளதாக க ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வருகின்ற 18 ஆம் திகதி இக் கடிதத்தை இந்தியத் தூதுவரிடம் கையளிக்கவுள்ளதாக
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post