தேர்தலை கொரோனா பரவலை காரணம் காட்டி பிற்போட வேண்டாம் என ஐக்கிய மக்கள்
சக்தி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
24 மாநகர சபைகள் / 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக்
காலத்தை அதிகரித்து நேற்று அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டது.
இவ் விடயம் சம்மந்தமாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்
கருத்து தெரிவித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன
இவ் வேண்டுகோளை விடுத்தார்.
69 இலட்சம் மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்ததாக கூறும் அரசாங்கம்
தேர்தலை நடத்த அஞ்சத் தேவையில்லை என்றும் கூறினார்.
Discussion about this post