உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் முக்கிய குண்டுதாரியான
சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த
குற்றப்பத்திரிக்கை சிங்கள மொழியில் இருந்ததானால்வருகின்ற
பெப்ரவரி மாதம் 24 திகதிக்கு வழக்கு மறுதவணைவ்ழங்கபட்டுள்ளது.
இக் குற்றப்பத்திரிக்கையினை சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்னத்தின்
கையெழுத்துடன் அவர் சார்பாக அரச சட்டவாதியினால் கல்முனை மேல் நீதிமன்றில்
நேற்று (10) தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குற்றப்பத்திரமானது சிங்கள மொழியில் தயரிக்கப்பட்டதனால் நீதிமன்ற
உத்தரவின் பிரகாரம் சந்தேக நபர் தமிழ் பேசுபவராக காணப்படுவதனால்
குற்றப்பத்திரத்தில் காணப்படும் சகல விடயங்களையும் தமிழ் மொழியில் மாற்றி வழங்க
வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு குறித்த வழக்கு நீதிபதி ஜயராம்
ட்ரொக்ஸினால் வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி
பிற்போடப்பட்டுள்ளது.
இதன்போது சஹ்ரானின் மனைவியான பிரதிவாதி பாத்திமா ஹாதியா மன்றில் ஆஜர்
செய்யப்பட்டிருந்தார். அவர் நீதிமன்றத்திற்கு கடும் பாதுகாப்பிற்கு
மத்தியில் அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post