வெலிக்கடை சிறைச்சாலையில் னடைபெற்றதாக பேசப்படும் சமூக படுகொலைகள்
சம்மந்தமாக , முன்னால் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ்
பரிசோதகர் நியூமால் ரங்க ஜீவ மற்றும் மெகஸின் சிறைச்சாலையின் முன்னாள்
அத்தியட்சர் லமாஹேவகே எமில் ரஞ்சன் ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு
எதிர்வரும் 12 ஆம் திகதி வரை பிற்போடபட்டுள்ளது.
2022 ஜனவரி 6 ஆம் திகதி இவ் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த
நிலையில், வழக்கானது மு.ப. 11.00 மணியளவில் கொழும்பு மேல்
நீதிமன்றின் 6 ஆம் இலக்க விசாரணை அறையில் விசாரணைக்கு வந்தது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான கிஹான் குலதுங்க தலைமையிலான பிரதீப் ஹெட்டி
ஆரச்சி, மஞ்சுள திலகரத்ன ஆகியோர் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார்
நீதிமன்றம் முன்னிலையில் இவ் வழக்கு தீர்ப்பு வ்ழ்ங்குவதற்காக
எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது திறந்த மன்றில் பேசிய தலைமை நீதிபதி கிஹான் குலதுங்க, இந்த
வழக்கின் தீர்ப்பு எழுதப்பட்டு முடிக்கப்பட்டுள்ள போதும், தட்டச்சு
பிழைகள் உள்ளிட்டவற்றை நீக்க வேண்டியுள்ளதாகவும் ,
தீர்ப்பு பூரணமாக தயாராகாவில்லை எனவும் கூறியுள்ளார்
இதனாலேயே , தீர்ப்பை வருகின்ற 12 ஆம் திகதி பிற்பகல் 1.30 மனிக்கு
அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.
Discussion about this post