சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக
தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனால், இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை தூதரகம்
பூட்டபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகத்தை சுத்தம் செய்வதனால், அலுவலக ஊழியர்கள் வேலைக்கு
சமூகமளிக்க மாட்டார்கள் எனவும் இதனால் 5ஆம் திகதி வரை அலுவலகம்
பார்வையாளர்களுக்காக மூடப்படும் என்று சிட்னியில் உள்ள இலங்கை துணைத்
தூதரகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post