கிளிநொச்சியின் பரந்தன் பிரதேசத்தில் நேற்று(01) நடைபெற்ற வன்முறை நிகழ்வின்
போது கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் பலியானார்
மற்றொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
இந் நிகழ்வு நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் பரந்தன் முல்லைத்தீவு
வீதியில் பரந்தன் வீதிக்கு அண்மையில் நடைபெற்றுள்ளது. இதன்போது பரந்தன்
பிரதேசத்தை சேர்ந்த கார்திக் வயது 24 என்பவர் பலியானதோடு, அவரது
தமக்கையாரின் மகன் படுகாயமடைந்து வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கார்திக்கை நான்கு பேர் தலைக் கவசத்தினால் தாக்கிக்கொண்டிருந்த போது அதனை தடுக்க சென்றதாகவும் இதன் போது
தன்னை அவர்கள் கூரிய ஆயுதத்தால் வெட்டியதனால் தான் காயமடைந்தாகவும்,
பின்னர் அவர்கள் கார்திக்கையும் வெட்டிக் கொலை செய்ததாகவும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் கூறியுள்ளார்.
இன்றைய (02) தினம் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி பொலீஸார் சென்று
விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில்
நீதவானும் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை பார்த்துள்ளனர்.
Discussion about this post