அரசு சர்வதேச நாணய நிதியத்தை அணுகாமைக்கு சீனாவின் அழுத்தங்கள்
மற்றும் நெருக்கடிகளே காரணம் என ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அவற்றையும் மீறி இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை அணுகினால்
சீனாவினால் வழங்கபடுவதாக வாக்குறுதியளித்துள்ள சகல
நிதியும் நிறுத்தப்படும் என தரிவித்தார்.
அத்தோடு சீனாவினால் கிடைக்கப்பெற்றுள்ள கடன்களையும் மீள செலுத்த
கடுமையான அழுத்தம் கொடுப்பார்கள் எனவும் விஜயதாச ராஜபக்ஷ
தெரிவித்தார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களை பெற்றால்
எவருமே தரகுப்பணத்த பெற இயலாது என்பதனாலேயே அவர்கள் இதுவரை சர்வதேச
நாணய நிதியத்தை அனுகவில்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கை பெரும் பணநெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுள்ள இவ் நிலையிலும்
அரசாங்கம் மக்களின் பணத்தை கொள்ளையடிக்க மட்டுமே முயற்சிக்கின்றது என
விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.
Discussion about this post