சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம்
முடிவெடுத்துள்ளது.
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாகவே இவ் நடவெடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாக
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
இதற்கமைய, வருகிண்ற 3ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதி வரை சப்புகஸ்கந்த
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவுள்ளது.
எனினும், நாட்டுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதனால்,
எரிபொருளுக்கு தட்டுப்பாடு வராது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post