அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாக முன்னாள்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நாட்டில் டொலர் பற்றாக்குறை,
வேலைவாய்ப்பு இன்மை, விவசாயிகள் பிரச்சினைகள் காணப்படுவதாக தெரிவித்தார்.
பல நாடுகள் கொரோனா தொற்றுக்கு மத்தியில், 2020 மற்றும் 2021 ஆண்டுகளின்
பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி
பெற வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய மாற்று வழியை
முன்னெடுக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்ககூறியுள்ளார்.
மலரவிருக்கும் புத்தாண்டில் உணவுத்தட்டுப்பாடு உருவாகினால் மக்கள் மத்தியில்
கடும் கோபம் ஏற்படும் எனவும் அது அரசாங்கத்தை பாதிக்கும் எனவும்அவர்
குறிப்பிட்டார்.
Discussion about this post