இலங்கையில் காணப்படும் தேசிய இனப் பிரச்சினையைத்முடிவுக்கு கொண்டுவரதேவையான
ஒத்துழைப்பை வழங்குமாறு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி ஜியோன் சங்கிடம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்வேண்டுகோள் விடுத்துள்ளன.
6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவிடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மறுக்க முடியாத அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு இவ்வாறு பங்களிப்பை வழங்குமாறு தமிழ்
அமைப்புக்கள் கூறியுள்ளன.
ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்வை பெற்றுகொள்ள, சர்வதேச மட்டத்திலான
கண்காணிப்புடன் பொதுசன வாக்கெடுப்பொன்றை மேற்கொள்ளஅனுமதிக்க வேண்டும்
எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும்
போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கைக்கு
எதிராக சட்டநடவடிக்கைம மேற்கொள்ள வேண்டும் என புலம்பெயர் தமிழ்
அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
Discussion about this post