கொழும்பு பல்கலைக்கழகத்தில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற பட்டமளிப்பு
விழாவின் போது பல்கலைக்கழக வேந்தரிடமிருந்து பட்டத்தை பெற்றுகொள்ளா மறுத்த
மாணவர்கள் செயற்பட்ட விதம் நாகரிகமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர்
முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில் அண்மையில் நடைபெறிருந்தபோது
சில மாணவர்கள் வேந்தரிடமிருந்து பட்டம் பெற்றுகொள்வதை மறுத்தனர்.
இச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக முன்னாள் ஜனாதிபதி
கூறுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Discussion about this post