தரமான பசளையை வினயோகிக்க வேண்டும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் 6.7
மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவுக்குச் செலுத்த இணக்கம்
தெரிவிக்கப்பட்டதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண
கூறியுள்ளார்.
இருபக்கத்தினதும் கருத்துக்களை ஆராய்ந்ததன் பின்னரே சீனாவிடமிருந்து
வந்த பசளை கப்பல் தொடர்பில் இறுதித் தீர்மானம்எடுக்கப்பட்டது.
சீனா சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
பெறுமதியான பிணையும் வைப்புச் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்
தெரிவித்தார்.
Discussion about this post