கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் இருந்த சமையல் எரிவாயுவை
நிராகரித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
குறித்த எரிவாயுவில் உள்ளடங்கியுள்ள Mercaptan எனும் கலவை தரம் குறைவானது
என்பது சோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கபட்டுள்ளதால், இந்த நடவடிக்கை
மேற்கொள்ளபட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர்
ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்தார்.
இதற்கமைய, குறித்த கப்பலிலுள்ள எரிவாயு கொள்கலன்களை பொதுமக்களுக்கு
வழங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்
Discussion about this post