இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong வட மாகாணத்திற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு சென்ற சீன தூதுவர் சில இடங்களை பார்வையிட்டதுடன், சில
சந்திப்புகளிலும் பங்குகொண்டார். இலங்கைக்கான சீன தூதுவர்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறைமுனை பகுதிக்கு சென்றிருந்தார்.
இதனையடுத்து, யாழ். நூலகத்தை அவர் மேற்பார்வையிட்டார். மடிக்கணினி மற்றும்
புத்தகங்கள் இதன்போது அன்பளிப்பு செய்யப்பட்டன. யாழ். பொது நூலகத்திலுள்ள
இந்தியன் கோர்னரையும் சீன தூதுவர் பார்வையிட்டார்.
இந்த பயணத்தை நீண்ட நாட்களுக்கு முன்னர் திட்டமிட்டிருந்தாலும், COVID 19
தொற்று காரணமாக அது சாத்தியமாகவில்லை என Qi Zhenhong இதன்போது
குறிப்பிட்டார்.
இலங்கையுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கையின் ஏனைய
இடங்களுக்கும் எதிர்காலத்தில் செல்லவுள்ளதாக அவர் கூறினார்.
சீனாவும் இந்தியாவும் சிறந்த நண்பர்கள். சிறந்த பங்காளர்கள். சிறந்த
அயலவர்கள். சீனாவும் இந்தியாவும் இலங்கையுடன் நட்பை பேண முடியும் என நான்
நினைக்கிறேன். இரு தரப்பினாலும் தமிழ் சமூகத்திற்கு அனுகூலங்கள் கிட்ட
முடியும்
என Qi Zhenhong கூறியுள்ளார்.
Discussion about this post