குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை விலக்கிவைத்துவிட்டு , தமிழ் பேசும்
கட்சிகளின் ஒண்றிணைந்த தீர்மானம் என்று ஊடகங்கள் வெளியிடுவதை தயவு செய்து
நிறுத்த வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணி குறிப்பிட்டுள்ளது.
ஊடக அறிக்கை ஊடாக இவ் விடயத்தினை குறிப்பிட்டு தமிழர்
விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தினால் அறிக்கை இன்று
வெளியிடப்பட்டுள்ளது.
“ ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒண்றிணைந்த முடிவு என ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்த வேண்டும். என குறித்த அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது
குறித்த சில கட்சிகள் ஒன்று சேர்ந்து எடுக்கும் தீர்மானம் தமிழ்
மக்களுக்கு மேலும் ஆபத்தையும் ஏற்படுத்தும் என
குறிப்பிடட் கட்சிகளின் தலைவர்கள் விளங்கி கொள்ளவில்லை என்பதை
நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது.
அயல் நாடுகளின் அழுத்தத்தை பிரயோகிக்க சொல்லி கோருவது முட்டாள்த்தனமான
செயலாகும். இதன் மூலம் உள்ளூர் அரசியல் வாதிகளை கோபமடைய செய்யும் செயலாகும் அதுமட்டுமல்லாமல்
குறித்த நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள புரிந்துணர்வை
உடைக்கும் செயற்பாடாகவும் அமைந்துவிடும் என அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது
Discussion about this post