இலங்கையிலே ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டுமாக இருந்தால் அதற்கு அனைத்து மக்களின் ஆதரவும் ஓரளவிற்காவது இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
கனடாவில் சர்ச்சைக்கு உள்ளான நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்,
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தன்னிடம் வந்து, “உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiya Rasamanickam) தமிழர்கள் மத்தியில் மட்டும் பிரபலமானவர் அல்ல, முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டும் பிரபலமானவர் அல்ல, இன்றைக்கு தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் ஏதேனும் அநீதி நடந்தால் கூட அவருக்கு தான் தொலைபேசி அழைப்பினை எடுக்கிறார்கள். இப்போது எங்களுக்கு ஒருவரும் தொலைபேசி அழைப்பினை எடுப்பதில்லை” என தெரிவித்தார்.
இலங்கையிலே ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டுமாக இருந்தால் அதற்கு அனைத்து மக்களின் ஆதரவும் ஓரளவிற்காவது இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post