யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினைப் பெற்றுக்
கொடுக்க, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு
செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்
போதே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன
இவ்வாறு குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட, காணாமல் போனோர்
அலுவலகத்தினால் ஓரளவு தவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது என்றும் அவர்
தெரிவித்தார்.
எனவே அதனை விரைவுபடுத்தி இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்கொண்டு செல்ல
வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் இழப்பீடுகளை வழங்க அமைக்கப்பட்ட இழப்பீடு அலுவலகத்திற்கு அடுத்த
ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சொற்ப நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது என
எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் வடக்கிலோ தெற்கிலோ யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நியாயமொன்றை வழங்க புதிய நிதியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
எரான் விக்ரமரத்ன கேட்டுக்கொண்டார்.
Discussion about this post