அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்கள் தீவிரமடைந்தால்
இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும்.
மீண்டுமொரு நாடு தழுவிய முடக்கம் பொருளாதாரத்திற்கும் மாத்திரமல்ல நாட்டு
மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஸ்ரீ லங்கா பொதுஜன
பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
Discussion about this post