கிளிநொச்சி இலங்கை வங்கியால் வட்டக்கச்சி கட்சன் வீதியில் இலங்கை
வங்கியின் முகவர் வங்கியியல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டாம் திகதி இலங்கை வங்கியின் வட மாகாண பொது முகாமையாளர் வி.
சிவானந்தன், பிரதேச முகாமையாளளர் திரமதி சு. நேதானந்தன்,கிளிநொச்சி கிளை
முகாமையாளர் க.அலன் கிராம அலுவலர் ஜோன் ஜெகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு
இந் நிலையத்தினை திறந்து வைத்துள்ளனர்.
இதன் மூலம் அப்பிரதேச மக்கள் இதுவரை கா லமும் கிளிநொச்சி நகருக்கு சென்று
மேற்கொண்ட வங்கி நடவடிக்கைகளான பணம் வைப்புச் செய்தல், பணம் மீளப்
பெறுதல், இலங்கை வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்புதல், கட்டளைகளுக்கான
பணம் செலுத்துதல்,மீள் நிரப்பும் நடவடிக்கை என காலை 8 மணி முதல் மாலை 7
வரை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post