இலங்கைக்கு சொந்தமான வளங்கள், நிலம் என்பன பல நாடுகளுக்கு சொந்தமாக வழங்கப்படுமாயின் இந்த நாட்டில் பிறந்த தமிழ் மக்களுக்கு ஏன் அவர்களின் தாயக உரிமையை வழங்கவில்லை என புதிய இடதுசாரி முன்னணிியன் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
துறைமுக நகரத்தை சீனாவுக்கும், திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கும் வழங்க முடியுமாயின் தமிழ் மக்கள் அவர்கள் கோரும் ஈழத்தை வழங்குவது மிகவும் நியாயமானது.
தமது தாயக பூமி அடங்கிய ஈழ நாட்டை கோரி வடக்கில் தமிழ் இளைஞர் ஆரம்பித்த போராட்டத்தை அவர்கள் பயங்கரவாதிகள் எனப் பெயரிட்டு அடக்கியது மேற்குலகம்.
சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஈழத்தை வழங்க வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் வழங்கப்படும் ஈழ நாட்டுக்கு சர்வதசத்தின் அங்கீகாரம் கிடைக்கும் எனவும் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் மீதான இனவெறி படுகொலை தொடர்ந்தும் நடைபெறுவதால், ஐக்கிய நாடுகள் அமைப்பு அது தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை யோசனை ஒன்றை நிறைவேற்றியது. தமிழ் இனப்படுகொலை நடந்தது என 2013 ஆம் ஆண்டு இறுதியில் ஜேர்மனியின் பிரேமன் நகரில் மக்கள் தீர்ப்பாயத்தின் சர்வதேச நீதிபதிகள் தீர்மானித்தனர்.
இன வெறி குற்றச்சாட்டு மாத்திரமல்ல தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டைக் கூட இலங்கை அரசு நிராகரித்து வருகிறது.
ஒரு இனவெறி படுகொலை நடந்தது என்பதை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு தமது தாயக உரிமையை வழங்க வேண்டும் என கலாநிதி விக்ரபாகு கருணாரத்ன(Wickramabahu karunaratne) தெரிவித்துள்ளார்.
அதனை சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் பொருத்தமான காரியமாக தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கும், திருகோணமலையை இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு வழங்க முடியுமானால், தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமையான தமிழீழத்தை வழங்க வேண்டும் எனவும் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post