இலங்கை மக்கள் மகிந்தானந்த அளுத்கமகே போன்று வேறு எந்த அமைச்சரையும் மோசமாக வெறுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார்.எனது வாழ்க்கையில் இலங்கையின் வரலாற்றில் மகிந்தானந்த அளுத்கமகே போன்று தோல்வியடைந்த அமைச்சரை நான் பார்த்ததில்லை என தெரிவித்துள்ள குமார வெல்கம அமைச்சர் இரசாயன உரங்களை இறக்குமதி செய்யவில்லை என தெரிவிக்கின்றார் ஆனால் இரசாயன உரங்கள் நாட்டிற்கு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.இன்று எங்களால் இரசாயன உரங்கள் இன்றி எதனையும் செய்ய முடியாது,இது தவறான முடிவு அவர்கள் இரசாயன உரங்களை பயன்படுத்துவதை 25 வீதத்தினால் குறைத்திருக்கலாம் என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.உலகில் இயற்கை உரத்திற்கு 100 வீதம் திரும்பிய நாடு இலங்கை என காண்பிப்பதற்கு அவர்கள் முயன்றனர் நான் மகிந்தானந்த அளுத்கமகேயாக இருந்திருந்தால் பதவியை இராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு சென்றிருப்பேன் என குமாரவெல்கம தெரிவித்துள்ளார்.
Discussion about this post