கிளிநொச்சி மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கையானது
சுமார் 71 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இயற்கை உரமானது
விவசாயிகளின் 10 வீதத்தை கூட பூர்த்தி செய்ய கூட போதுமானதாக
மாவ்டடத்தில் கிடைப்பதில்லை என இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன
செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இராசாயன உரம் வழங்க கோரி விவசாயிகள் இன்று (15) கிளிநொச்சி மாவட்டச்
செயலகத்தின் முன் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுப்படடனர். இதன் பின்னர்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
100 வீத சேதனப் பயிர்ச் செய்கை திட்டமானது குறைந்தது ஐந்து ஆண்டுகள்
திட்டமாகவேனும் நடைமுடைப்படுத்தப்படல் வேண்டும் அதுவே நடைமுறைக்குச்
சாத்தயமானது. மாறாக மூன்று நான்கு மாதங்களில் இத் திட்டத்தை
நடைமுறைப்படுத்த முனைவது என்பது 80 வீத நடைமுறைச் சாத்தியமாகவே
காணப்படும். எனவே இதனால் விவசாயிகள் முழுமையான அறுவடையை பெற்றுக்கொள்ள
முடியாத நிலை ஏற்படும். இது நாட்டில் உற்பத்தி பெருக்கத்தை குறைத்து
பஞ்சத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என தெரிவித்துள்ள அவர்
ஐனாதிபதி சேதனப் உரப் பயன்பாட்டுத் திட்டத்தை விவசாயிகளின் நலன்கருதி மீள
பரிசீலனைக்குட்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விவசாயிகளால் மகஜர் ஒன்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதி
அரசஅதிபர் ஸ்ரீமோகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post