நாடாளுமன்ற உரை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கும்
நிலையுள்ளதனால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள்
உரையாற்றுவதற்கு அச்சங்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
தெரிவித்தார்.
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று
(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை
தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நான் பேசிய ஒரு விடயத்தினை இவ்வாறு விசாரணைசெய்யுமாறு
கூறினால் வருங்காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு
அச்சம்கொள்ளும் நிலையே ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்
Discussion about this post