மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த இரண்டு வழிமுறைகள் காணப்படுவதாக
வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த வாரம் இடம்பெற்ற விசேட
அமைச்சரவைக் கூட்டத்தின்போது, அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது
தொடர்பாக ஆராயப்பட்டது.
இதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் இணங்கியதைத் தொடர்ந்து, அரசமைப்புத்
திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பாக ஆராய நிபுணர் குழுவொன்றும்
ஸ்தாபிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் அறிக்கையானது இந்த வருட இறுதிக்குள் எமக்கு கிடைக்கும்
என நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
அனைத்து தேர்தல்களையும் ஒரே முறையின் கீழ் நடத்தும் நோக்கிலேயே இந்த
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவும் நாம் ஆலோசித்து வருகிறோம்.
இதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று கலப்புமுறையில் தேர்தலை
நடத்தவேண்டும். இல்லையெனில், 2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால்
இல்லாது செய்யப்பட்ட தேர்தல் முறைமையை மாகாணசபைத் தேர்தலுக்கு மட்டும்
மீளப் பயன்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றின் அங்கீகாரத்தை பெற வேண்டும்
எனத் தெரிவித்துள்ளார்
Discussion about this post