கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் அவர்கள் அண்மையில் கண்டாவளையில் உள்ள தனது வயலில் ஏர் பூட்டிய காளைகளினால் வயல் நிலத்தினை உழுவதும் , விதைப்பதும், அங்கு அவருடன் வேலை செய்பவர்களுக்கு ஒரு வயல் சொந்தக்காரன் உணவு கொடுத்து உபசரிப்பதும் பாரம்பரிய முறைப்படி தட்டுவம் என்று சொல்லப்படும் பனை ஓலையால் செய்ப்படும் சாப்பாட்டு தட்டினை அவரே செய்வதும் எமது பாரம்பரியத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது. இது பண்பாட்டு அடிப்படையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே ஆனால் சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள் .
அதாவது வெளிவந்த அவரது படங்களில் காளைகள் சரியாக நுவத்தில் பிணைக்கப்படவில்லை ,பொங்கல் பானையில் மாவிலை வாடவில்லை, புதிய ஆடை அணிந்துள்ளார் , உழப்படாத வயலில் விதைக்கிறார் என்றும் சிலர் அவர் விதைக்கவில்லை மாகாண சபைக்கு உரம் போடுகிறார் என்றும் பதிவிட்டு வருகிறார்கள் .
எது எப்படி இருந்தாலும் ஒரு விவசாயின் பணிகளை அப்படங்கள் காத்திரமாக காட்டுவது ஒரு சிறப்பம்சமாகும்.
Discussion about this post