இலங்கையில் சீனாவின் முதலீடுகள் காரணமாக இந்தியாவின் நலன்களிற்கு
பாதிப்பு ஏற்படாது- ஏற்படாது என இந்தியாவிற்கான இலங்கையின் தூதுவர்
மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு வழங்கியுள்ள பிரத்தியேக போட்டியில் அவர் இதனை
தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள்
குறித்து இலங்கை அக்கறையின்றி இருப்பது குறித்து இந்தியாவில் காணப்படும்
கரிசனைகளிற்கு மத்தியில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும்
அபிவிருத்தி திட்டங்கள் தாமதமாவதற்கு வெளிக்காரணிகள் காரணமில்லை என
இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார் என டைம்ஸ் ஒவ் இந்தியா தெரிவித்துள்ளது.
சீனாவின் முதலீட்டு காலடிதடங்கள் இலங்கையில் காணப்படுகின்ற அதேவேளை
இந்தியாவின் நலன்களிற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் விதத்தில் சீனாவின்
நடவடிக்கை பாதுகாப்பு விவகாரங்களை வரை விரிவடையவில்லை என மிலிந்த மொராகொட
தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள்
தாமதமாவதற்கு எந்த தீயநோக்கங்களும் காரணமில்லை என நாங்கள் கருதுகின்றோம்
என குறிப்பிட்டுள்ள மிலிந்த மொரகொட எங்களுக்கு என அதிகாரிகள் அமைப்பு
அரசியல் ஆகியன உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது இதனுடன் தொடர்புபட்ட விடயம் அதிகாரிகள் மட்ட தாமதங்கள் குறித்து
ஜனாதிபதி பொறுமையிழந்துள்ளார் இவற்றிற்கு தீர்வை காண்கின்றோம் எனவும்
மிலிந்தமொரகொட தெரிவித்துள்ளார்.
Discussion about this post