ஜனாதிபதி கோத்தபாயவின் அழைப்பை புலம்பெயர் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் என கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று கிளிநொச்சி – செஞ்சோலை
சிறுவர் அபிவிருத்தி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்
பியல் நிஷாந்தவுடன் கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன்
கலந்துகொண்டிருந்தார்.
புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பு
தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த கேபி.
ஜனாதிபதியின் தூர நோக்கு தான் இது. அதனை வரவேற்பது தமிழர்களாகிய தமது
பொறுப்பு எனவும் படிப்படியாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் எனவும் கூறிய
அவர், இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்றார்.
அத்தோடு இறுதி யுத்த காலத்தில் தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்த போது
தன்னிடம் எந்த சொத்தையும் வழங்கியிருக்கவில்லை எனவும் நாளாந்த செலவிற்கு
தான் பணம் வழங்கியிருந்ததாகவும் குமரன் பத்மநாதன் இதன்போது தெரிவித்தார்.
Discussion about this post