உலக ஆசிரியர் தினத்தை கரிநாளாக கருதி குறித்த நாளில் தமக்கான சம்பள
முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கிளிநொச்சி
மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை,பளை,பூநகரி கோட்டத்தை சேர்ந்த அதிபர்,
ஆசிரியர்கள் கிளிநொச்சி வலயக்கல்விப்பணிமனை முன்பாக இன்று காலை 10.30
மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறுப்பு துண்டுகளை கட்டி, கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு சம்பள முரண்பாட்டை
நீக்கு , இலங்கை ஆசிரியர்களுக்கு கரிநாள், 5000 ரூபாய்க்கு அடி பணிய
மாட்டோம்,சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்து உள்ளிட்ட பதாகைகளை
ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒரு
மணித்தியாலம் வலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Discussion about this post