2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கத்தினால் ஜனநாயகத்தை
வலுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும்
தற்போதைய அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாகப் பின்நோக்கி
நகர்த்திச்செல்கின்றது என்று இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின்
பிரதிநிதிகள் தம்மிடம் கூறியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற
உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்
அவர்கள் இலங்கைக்கு வருகைதருவதற்கு முன்னதாகவே கடந்த இருவருடகாலத்தில்
நாட்டில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் நன்கு அறிந்திருக்கின்றார்கள்
என்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post