தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்பி அரசியல்
லாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும்
செயற்பாட்டைநிறுத்துங்கள் என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி
ஸ்ரீ விமல தேரர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஆரியகுள பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக
ஊடகங்களில் வந்த செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் ஆரிய குள
அபிவிருத்தி சம்பந்தமாகவும் அதில் புத்த விகாரை அமைக்க முயற்சி என்ற
செய்தியினைப் பார்த்தேன் அந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை.
நாக விகாரைக்கு அண்மையில் சுற்றுலா மையத்தினை அமைப்பது தொடர்பில் எனது
அதிருப்தியை வெளியிட்டுருக்கின்றேன்.
குறித்த அபிவிருத்தி தொடர்பில் எம்முடன் கலந்தாலோசிக்க படவில்லை இது ஒரு
புனித பூமி. இந்த குளத்தில் சுற்றுலா ஹோட்டலை குளத்தின் நடுவில்
அமைப்பதை நிறுத்தி இந்து மற்றும் ஏனைய மதத்தவர்கள் ஒன்றிணைந்து செயற்பட
கூடிய வாறு ஒரு நல்லிணக்க மண்டபம் ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை
விடுத்திருந்தேன்
எனவே ஒரு சிலரின் அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான மதங்களுடையில்
பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்
எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
Discussion about this post