காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளை, தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றும் ஆர்ப்பாட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன..
யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் இன்றைய தினம் (01)
யாழிலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை
முன்னெடுத்தனர்.
இதேவேளை, சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா, முல்லைத்தீவு
மற்றும் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினரும்
கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களின் போது உறவினர்கள் இறுதி
யுத்தக் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் பிள்ளைகளை ஒப்படைக்க கோரி
கோசம் இட்டனர்.
Discussion about this post