காணாமல் போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ் உடனடித் தீர்வாகத் தான்
அவதானிக்கப்படுகின்றது. அது நிரந்தமான தீர்வாக அமையாது என பாராளுமன்ற
பிரதிக்குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக்
குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான இறப்புச்
சான்றிதழ் வழங்கப்படும் என்று ஜனாதிபதி நியூயோர்க் நகரில் உரையாற்றிய
கருத்து தொடர்பில் ஊடகவியாளாலர்கள் எழுப்பிய கேள்விக்கு நேற்று (28)
பதில் அளிக்கையிலேயே அங்கஜன் இராமநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், காணாமல் போனவர்கள் தொடர்பாக
சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். மாற்றுக் கருத்து உண்மையாகவும்
இருக்கலாம். சிலருக்கு எந்ததொரு முடிவும் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இது இறப்புச் சான்றிதழ் மூலம் கிடைக்குமாயின் அது குறைந்த பட்சம் உடனடி
தேவையாக இருக்கும். அதற்காக உறுதி மொழியினை அரசாங்கமே வழங்கும் அது
நிலையான கொள்கை உடையது.
பகுதி, பகுதியாகத் தான் தீர்வுகளை எட்ட முடியும். கிடைக்க முடியாத
எந்ததொரு தீர்வினையும் பெற்றுக் கொடுக்கவில்லை. முதற்தடவை
காணாமற்போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ் கிடைக்கப்போகிறது. யுத்தம்
முடிந்து 10 வருடம் ஆகிவிட்டது. மேலும் 30, 40 வருடத்திற்கு
முற்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உறவினர்களின்
நலனை கொண்டு அதற்காக உடனடித் தீர்வுக்காக இறப்புச் சான்றிதழ்களை
வழங்கின்றோம். இதனை உடனடி மருந்தாக தான் பார்க்கின்றேன். உடனடித் தேவை
என்பது மருந்து அதன் பின்னர் தான் மருந்தின் பலன் கிடைக்கும் என்றார்.
Discussion about this post