இலங்கையின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை சர்வதேச
நிறுவனங்களுக்கு ஒருபோதும் வழங்க முடியாது என்றும் அதற்கான தேவையும்
தமக்கு இல்லை என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து பிரச்சினைகளுக்கும் உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காணும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்
ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக
சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்கள் தலையிடுவது
அரசியலமைப்பிற்கு முரணாக அமைவதுடன் அரசியல் கட்டமைப்பிற்கும் பாதிப்பை
ஏற்படுத்தும் என்றும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
ஒரு நாட்டின் உள்ளக விவகாரத்தில் சர்வதேச அமைப்புக்கள் மனித உரிமை
கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தலையிட முடியாது என்பதை சர்வதேச
நாடுகளும், சர்வதே அமைப்புக்களும் ஏற்றுக்கொண்டுள்ளன என்றும் அவர்
குறிப்பிட்டார்.
Discussion about this post