யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி – பளை ஆகிய பகுதிகளில், 60,000
குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இரண்டு முக்கிய நீர்
திட்டங்களை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஒக்டோபர் 6ஆம் திகதியன்று,
யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
தாழையடியில் கட்டப்படும், SWRO உப்பு நீக்கும் ஆலைபிரிவு, மற்றும்
நயினாதீவில் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட நீர் வழங்கல் திட்டம்
போன்றவற்றை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
மேலும், யாழ்ப்பாண நகர நீர் விநியோகத் திட்டமும் விரைவில் தொடங்கப்படும்.
இதில் 1 இலட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய JKWSSP இன் ( Jaffna
Kilinochchi Water Supply and Sanitation Project) கீழ் 284 கிலோ மீற்றர்
நீளமுள்ள குழாய்களை அமைப்பதில் அடங்கும்.
யாழ்ப்பாண நகர நீர் விநியோகம் மற்றும் தாழையடி SWRO உப்பு நீக்கும்
ஆலைபிரிவு, 2023க்குள் முடிக்கப்பட்டு 3 இலட்சம் பயனாளிகளுக்கு சுத்தமான
நீர் வழங்கப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post