ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக எமது மூதாதையர்கள்
பல்வேறு போராட்டங்களை நடத்திய வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு
நோக்குகையில், பிறிதொரு வெளிநாட்டவரின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதை நாம்
விரும்புகின்றோம் என்றும் கூறுவது சங்கடமான விடயமாகும்.
இருப்பினும் 1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பிற்கு முன்னர் இலங்கை
டொமினியன் அந்தஸ்த்தில் இருந்தபோது தமிழர்கள் உள்ளிட்ட
சிறுபான்மையினத்தவருக்கான உயர் அங்கீகாரம் காணப்பட்டது என்று
சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு
மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான
சி.வி.விக்னேஸ்வரன், தற்போது எமது மக்களுக்குச் சொந்தமானவற்றை அவர்களிடமே
ஒப்படைப்பதற்கான மிகவும் வலுவான அழுத்தத்தை சர்வதேச சமூகம் இலங்கை
அரசாங்கத்தின்மீது பிரயோகிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கவேண்டியது
அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் காலங்காலமாக அரசாங்கங்களினால்
மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும்
வகையில் தயாரிக்கப்பட்ட ‘தாய்நிலம் : நில அபகரிப்பு இலங்கைவாழ்
தமிழ்மக்களின் உண்மையான பெருந்தொற்று’ என்ற ஆவணப்படத்தின் திரையிடல்
நிகழ்வு கடந்த சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு இணையவழியில்
நடைபெற்றது. இந்நிகழ்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே
சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Discussion about this post