நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை உள்ளக பொறிமுறைகள் ஊடாக பல்வேறு
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். இந்த நிறுவனங்களால்
மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது
கையகப்படுத்தவோ முடியாது.
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற
தற்காலிகமான பொறிமுறையை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன் இன்று
நியூயோர்க்கில் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பொன்றின் போதே ஜீ.எல்.பீரிஸ்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Discussion about this post