அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக,
இன்று (16) காலை சட்டத்தரணிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
பாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சென்ற நிலையில், அவர்களுக்கான அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது
அநுராரபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள்ஈ கடந்த
12ஆம் திகதியன்று சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சரினால் அச்சுறுத்தப்பட்டு
பின்னர் அவர் பதவிவிலகியுள்ள நிலையில், இந்த செயற்பாடு தொடர்பில் பலர்
கண்டனங்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் இன்று காலை அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை
பார்வையிடுவதற்காக சென்றவர்களுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post