கொழும்பு துறைமுகத்தின் 13 ஏக்கர் காணியை சீன நிறுவனமொன்றிடம் கையளிக்க முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு துறைமுக ஒன்றிய தொழிற்சங்க அமைப்பு, ஜனாதிபதியைக் கோரியுள்ளது.
குறித்த இடத்தில் தெற்காசிய சேவைகள் விநியோக மத்திய நிலையம் எனும் பெயரை கொண்ட கூட்டு முதலீட்டு வேலைத் திட்டத்துக்காக சீன நிறுவனமொன்றுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ள துறைமுக ஒன்றிய தொழிற்சங்க அமைப்பு,
துறைமுக எதிர்கால அபிவிருத்தி உபாய மார்க்கங்களுக்கு தேவையான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலுள்ள காணிகளை எக்காரணத்துக்காகவும் விற்க வேண்டாம் என வேண்டுகோவள் விடுக்கப்பட்டுள்ளது .
Discussion about this post