கனடாவின் வேலையின்மை வீதம் சடுதியாக அதிகரிப்பு , முதன்முறையாக, பெரும்பரவலுக்கு முன்னைய அளவுகளுக்கு நிகராக வீழ்ச்சியடைந்துள்ளது. ஜூலை மாதத்தில் 7.5 வீதமாக இருந்த வேலையின்மை வீதம், கடந்த மாதம் 7.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .
இது கோவிட் பெரும்பரவல் காலத்தில் எதிர்கொள்ளப்படும் குறைவான சதவீதம் என சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு ஓகஸ்ட் மாதத்தில், 90,000 புதிய வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது . உணவுகம் அடங்கலாக, பெரும்பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளிலும் முழுநேர வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சேவைகளை வழங்கும் துறைகளில் வழங்கப்பட்டுள்ள அதிக வேலைவாய்ப்புக்கள், வேலையின்மை வீதம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது , இதனுடன் ஒப்பிடுகையில், உணவு மற்றும் சில்லறை விற்பனை துறைகளில், வேலைவாய்ப்புக்கள் குறைவாகவே உருவாக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் மாதத்துக்கான கனடாவின் வேலையின்மை வீதம், இவ்வாறு, பெரும்பரவலுக்கு முன்னைய அளவுகளுக்கு நிகராக, 7.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், வேலைக்கான தேவை இருந்தும், இன்னும் வேலை தேடாமல் உள்ள மக்களையும் சேர்த்து பார்த்தால், வேலையின்மை வீதம் 9.1 வீதமாக இருக்குமெனவும், கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Discussion about this post