கனடாவின் டொரோண்டோ பாடசாலை கழகம் இன்று கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அத்துடன் கனடாவின் யோர்க், பீல், டூர்ஹம் பாடசாலை கழகங்களும் இன்று செயற்பட தொடங்குகின்றன. அந்தவகையில் ஒண்டாரியோவில் கிட்டத்தட்ட இருப்பது இலட்சம் மாணவர்கள் இந்த கல்வியாண்டில் நேரடி வகுப்புக்களுக்கு திரும்புகிறார்கள். சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்தே பாடசாலைகள் மீள்திறப்பு நடைபெறுகின்றது . யோர்க் மற்றும் ஹமில்ட்டன் பிராந்தியங்களின் கத்தோலிக்க பாடசாலை கழகங்கள் நேற்றும், நயாகரா, ஹோல்ட்டன் அடங்கலான பிராந்தியங்களின் பாடசாலை கழகங்கள் நேற்று முன்தினமும் இயங்க ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளில் ஏற்படும் தொற்றுக்கள் பகிரங்கமாக இம்முறையும் வெளியிடப்படவுள்ளன. அதேவேளை, ஒண்டாரியோவின் 72 பாடசாலை கழகங்களின் கீழான பாடசாலைகள் அனைத்தும், தகுந்த காற்றோட்ட வசதிகளை கொண்டிருக்கும் இலக்கை எட்டியுள்ளதாக, கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் மூடப்படும் அவசியங்கள் ஏற்பட்டாலும், அவை குறுகிய கால அடிப்படையிலேயே இருக்குமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Discussion about this post