வருகின்ற செப்டம்பர் 22 இல் இருந்து ஒண்டாரியோவில் தடுப்பூசிச் சான்றிதழ் காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . அதன் அடிப்படையில் களியாட்ட விடுதிகள் , விழா மண்டபங்கள் , அமர்ந்து உணவருந்தும் உணவகங்கள் ,திரையரங்குகள் , உடற்பயிற்ச்சி நிலையங்கள் மற்றும் பொது இடங்கள் உட்பட பல இடங்களிற்கு இரண்டு தடுப்பூசியும் பெற்றுக்கொண்டதத்தற்காண ஆதாரத்தினை காண்பிக்க வேண்டும் . எனினும் மருந்தகங்கள் , வைத்தியசாலை , வங்கிகள் , சிகையாலங்கார நிலையங்கள் , வணக்க தலங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் , எடுத்துச்செல்லும் உணவகங்கள் போன்றவற்றிற்கு தடுப்பூசிச் சான்றிதழினை காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என கடந்த புதன்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் நகரமுதல்வர் டக் போட் ( Premier Doug Ford ) தெரிவித்தார்.
மேற்றபடி சட்டம் 12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post