நாட்டை முடக்குவத்தால் மட்டும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது
என்றும் எனவே இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் எனவும் சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள முடக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் பயணக் கட்டுப்பாடுகள்
கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர்
வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நாட்டை முடக்குவாதம் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க
முடியாது ஏனெனியில் முடக்கம் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வழியில்
மாத்திரமே உதவும் என கூறினார்.
மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றால் நாட்டை முடக்குவது
அர்த்தமற்றதாகிவிடும் என குறிப்பிட்ட அவர் வீதிகளில் தற்போது பயணிக்கின்ற
வாகனங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் முடக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் போக்குவரத்து, வணிக
நிலையங்கள் மற்றும் பொது இடங்கலில் மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்க பொறுப்பான
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Discussion about this post