இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) நாட்டிற்கு 780 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பெறப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் பங்களாதேஷிடமிருந்தும் 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைத்துள்ளதாக
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் மத்திய வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கிக்கு இடையிலான நிதி
கொடுக்கல் வாங்கல் வசதியின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த
நிதியினூடாக இலங்கையில் அந்நிய செலாவணியின் அளவு அதிகரித்துள்ளதாக
எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சீன அபிவிருத்தி வங்கியினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர்
கடன் தொகை நாட்டுக்கு கிடைக்கவுள்ளது.
இது பத்து வருடங்களில் செலுத்தகூடாய ஒரு இலகு தவணை முறையில் நிபந்தனையின்
நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.
ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post