கொவிட்-19 தொற்றுநோயால் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாடுகளிடையேயான
ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இலங்கை – துருக்கி ஆகிய
நாடுகள் இருதரப்பு அவதானம் செலுத்தியுள்ளன.
இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதுவர் டிமெட் செகெர்சியோலு மற்றும்
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அண்மையில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில்
நடைபெற்றது. இதன் போதே இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
கொவிட்-19 தொற்றுநோயால் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாடுகளிடையேயான
ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் இந்தக் கலந்துரையாடலின்போது
சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தநிலையில், துருக்கி இலங்கைக்கு செயற்கை சுவாச கருவிகள் மற்றும்
தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை இந்த ஆண்டு பெப்ரவரியில் நன்கொடையாக
வழங்கியமையை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
Discussion about this post